அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?
இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.
ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி.
சுழல், சுழல் 2 இணையத் தொடர்களை எழுதியுள்ளார்கள். சமீபத்தில் சுழல் 2 தொடர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் புஷ்கர்- காயத்ரி பேசியதவாது:
எங்களுடைய அடுத்த படத்தின் திரைக்கதை தயாராக உள்ளது. அது மிகவும் தனித்துவமான கதை. இதுவரை எடுக்கப்படாத ஒரு வகைமை. இதை நகைச்சுவை, த்ரில்லர், டிராமா என எதிலும் அடக்கமுடியாது.
இந்தாண்டு அறிவிக்கப்பட்டு 2026இல் வெளியாகும். நடிகர் அஜித்துடன் வேலைப் பார்க்க ஆர்வம் இருக்கிறது. ஆனால், இதுவரை படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை எனக் கூறினார்கள்.