பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!
நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.
தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பின்னர் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது.
கீர்த்தி சனோன் நடிப்புக்காக மிமி படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு வெளியான டோ பட்டி எனும் படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
கதை வியக்க வைக்க வேண்டும்
ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனோன் பேசியதாவது:
இணையத்தொடரில் நடிக்க வேண்டுமெனில் அந்தக் கதை நடிகையாக என்னை வியக்க வைக்க வேண்டும். முற்றிலும் புதியதாக இருக்க வேண்டும். என்னெனில் அது படத்தைவிட நீளமாக இருக்கும். அதனால், அந்தளவுக்கு நீண்ட நேரத்தில் நடிக்க என் ஆர்வத்தை தூண்டும் கதையாக இருக்க வேண்டும்.
ஸ்ட்ரீ 2, சாவா ஆகிய படங்கள் வசூலில் அசத்தியது நல்ல விஷய்ம். நாம் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும் என்றார்.