ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவை வெளியிட்டது.
அதில், ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தன.
இதையும் படிக்க: திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு..! மாதுரி தீக்ஷித்!
இந்த நிலையில், ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாள்கள் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் பின்னர் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.