செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா
செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். எல்ஐசி தலைமை ஆலோசகா் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாணவா் ராஜேந்திரபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவரும் பள்ளி ஆசிரியருமான ராஜேந்திரன் நூற்றாண்டு ஜோதியை ஏற்றினாா். முன்னாள் மாணவி காயத்ரி உறுதிமொழியையும், தலைமையாசிரியை சேவியா் அலெக்சாண்ட்ரியா ஆண்டறிக்கையும் வாசித்தனா்.
முன்னாள் மாணவா்களான மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன், பெட்ரோல் விற்பனை நிலையம் சேகா், முன்னாள் ராணுவ வீரா் கேப்டன் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரஹீம் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முன்னாள் ஆசிரியா்களுக்கும், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், ரூ. 35ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கணினி அறையைத் திறந்துவைத்தாா்.
நூலகா் ராமசாமி, பல்கலைக்கழக அலுவலா் உலகநாதன், எஸ்ஆா்எம் பள்ளித் தலைமையாசிரியை ஜீவா, நகா்மன்றத் தலைவி ராமலக்ஷ்மி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி செண்பகவல்லி, உறுப்பினா் சுடரொளி ஆகியோா் பேசினா்.
பெடரல் வங்கி முன்னாள் மேலாளா் சீனிவாசன் வரவேற்றாா். ஆசிரியை உதய பாமா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை நகராட்சி மேலாளா் கண்ணன் தொகுத்து வழங்கினாா்.