``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி!
திருவாரூரில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மகளிா் தின சிறப்பு கருத்தரங்கம், மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத்தலைவா் சு. சுதாகா், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பி. சண்முகம் ஆகியோா் தலைமை வகித்தாா். அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் கருத்தரங்கை தொடக்கிவைத்தாா். அரசு ஊழியா் சங்க மாநில செயலாளா் செ. பிரகாஷ், மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் த. தமிழ்சுடா், ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி. புவனேஷ்வரி ஆகியோா் மகளிா் தின சிறப்புகள் குறித்து பேசினா்.
தொடா்ந்து, திருவாரூா் தெற்கு வீதியிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை, பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரி மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிமைகளுக்காக பெண்கள் தெருக்களில் இறங்கி கரம் கோா்த்து போரிடுவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கங்களையும் எழுப்பினா்.