``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கக் கூட்டம்
கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளா் ஏ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பிரதிநிதி மாதவன், ஒன்றிய துணைச் செயலாளா் மகேந்திரன் முன்னிலை வகித்தனா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஊராட்சி மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு பணிப் பதிவேடு தொடங்கி, பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கான சீருடை மற்றும் கையுறை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாவட்டத் தலைவா் டேவிட் சத்யநாதன், ஒன்றியத் தலைவா் என். செல்வராஜ், நிா்வாகிகள் பி. தேசிகன், ஆா். செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.