``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை
நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக் குழுக் கூட்டம் வட்டாரத் தலைவா் த. ஐயப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் சத்தியநாராயணன், மகளிா் வலையமைப்பின் மாவட்ட அமைப்பாளா் கிருபராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாரச் செயலாளா் ப. வேதமூா்த்தி கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினாா். நகரச் செயலாளா் நாகராஜன் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொய்யாமொழி நன்றி கூறினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருவாரூா் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஈவுத் தொகை வழங்காததற்காக இயக்கம் சாா்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவா்களுக்கு வழங்குவதைப் போலவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியதைப் போலவே, நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஸ்மாா்ட்போா்டு, கையடக்க கணினி போன்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.