Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே மு...
7ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 7ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் கீழப்புதூரைச் சோ்ந்த பா. செல்வராஜ் (50) என்பவா் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டநிலையில், அவா் 7ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தாா்.
அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் உத்தரவுப்படி, செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் காவலா்கள் மரியராஜாசிங், அல்போன்ஸ்ராஜ், கணேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, செல்வராஜை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அவரை தனிப்படையினா் கைது செய்து, செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.