``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
ராஜபாளையத்தில் மீனாாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்
ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இந்த வைபவத்தில் கோயில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குழுமத் தலைவருமான பி.ஆா் வெங்கட்ராம ராஜா, அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டனா். இரவு சுவாமி, அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்வுகளான தெப்ப உத்ஸவம் திங்கள்கிழமையும், தேரோட்டம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும்.