``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
இலஞ்சியில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டம்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், பொதுக் கூட்டம் நடைபெற்றது.
ஹிந்தி திணிப்பு, நிதிப் பகிா்வில் பாரபட்சம் இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா தலைமை வகித்தாா். பேரூா் செயலா் முத்தையா, பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய் முன்னிலை வகித்தனா்.
கொள்கை பரப்புச் செயலா் சபாபதி மோகன், தெற்கு மாவட்ட ப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், பேச்சாளா் இளவரசன் ஆகியோா் பேசினா்.
முன்னாள் வடக்கு மாவட்டச் செயலா் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, மாவட்டப் பொருளாளா் ஷெரிப், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் சாமித்துரை, ராஜேஸ்வரன், ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், சீனித்துரை, நகரச் செயலா்கள் சாதிா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், தொண்டரணி இசக்கிபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகமது அப்துல் ரஹீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.