ஸ்நேஹ ராணா போராட்டம் வீண்..! ஆர்சிபி வெளியேறியது!
மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியு்ள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் 18ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபியை வீழ்த்தியது.
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது.
5 அணிகள் உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து முதல் 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். கடைசி 2 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.
ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. ஆனால், அதில் வென்றாலும் எந்தப் பயனுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் உள்ள அணிகள்
1. தில்லி கேபிடல்ஸ் - 10 புள்ளிகள்
2. குஜராத் ஜெயண்ட்ஸ் - 8 புள்ளிகள்
3. மும்பை இந்தியன்ஸ் - 8 புள்ளிகள்
4. யுபி வாரியர்ஸ் - 6 புள்ளிகள்
5. ஆர்சிபி - 4 புள்ளிகள் ஸ்நேஹ ராணா
