சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள Customer Service Associate பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு விளையாட்டு போட்டியில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 1.4.2022 முதல் 31.1.2025 வரையிலான விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!
விரும்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.central bankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மூலம் மார்ச் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை பார்த்து படித்துதெரிந்துகொள்ளவும்.