சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
IND vs NZ : வெதர் எப்படி இருக்கிறது; வெற்றியைத் தீர்மானிக்கப்போவது எது?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று மோதுகிறது. இறுதிப்போட்டி உட்பட இந்தியா ஆடிய அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் ஐ.சி.சி நடத்தியது ஒருபுறம் கேள்விக்குட்பட்டது என்றாலும், துபாய் மைதானத்தில் மற்ற அணிகளையும் விடவும் இந்தியா 3, 4 ஸ்பின்னர்களுடன் விளையாடியதே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் எத்தகைய வீரர்களுடன் களமிறங்கப் போகின்றன என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான், துபாய் பிட்ச் வெதர் கண்டிஷன் முக்கியமான பணி செய்கிறது. வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பீல்டிங்கைக் கணித்து தேர்வுசெய்வது கடினமானதாக இருக்கும்.
இருப்பினும், இரவில் பனிப்பொழிவு குறைவாக இருப்பதால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இதனால் எதிரணிக்கு கடிமான இலக்கை நிர்ணயிக்கலாம். மேலும், துபாய் மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. புதிய பந்து பேட்டுக்கு நன்றாக வரும் என்பதால் பேட்டிங் செய்வதற்கு பவர்பிளே உகந்ததாக இருக்கிறது. பவர்பிளே முடிந்த பிறகு, மைதானத்தின் மேற்பரப்பை கணித்து ஆட பேட்மேன்ஸ்களுக்குக் கூடுமான நேரம் தேவைப்படும்.

இதுவரை நடந்த போட்டிகளில், மிடில் ஓவர்களில் ரன்கள் அடிப்பது வெற்றிக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், கடந்த ஆட்டத்தைப் போலவே ஜடேஜா, அக்சர், குல்தீப், வருண் சக்ரவர்த்தி என நான்கு ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்க வாய்ப்பிருக்கிறது. மறுபக்கம், நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் மட்டுமே முழுநேர சுழற்பந்துவீச்சாளராக இருப்பதால் ஃபீல்டிங்கில் மிடில் ஓவர்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பது சஸ்பென்சாகவே இருக்கிறது.