பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகார...
Rohit Sharma : `அது உங்களுக்குப் புரியாது சார்' - இயற்கை நியதிக்கே சவால்விட்ட ரோஹித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ரோஹித் சர்மா தோற்றிருந்தார். தொடர்ச்சியாக 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.

டாஸைப் பற்றியெல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவில்லை. என்ன செய்தாலும் அதைச் சரியாக செய்யவேண்டும் என்றே ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசியிருக்கிறோம் என ரோஹித் சர்மா டாஸின் போது கூறியிருந்தார். யோசித்தாலும் யோசிக்காவிடிலும் ரோஹித் டாஸில் தோற்கப்போகிறார் என்பதை இந்திய அணியின் வீரர்கள் முன்பே அறிருந்திருப்பர். போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூட கில், 'ரோஹித் தொடர்ந்து டாஸில் தோற்பதைப் பற்றி ட்ரெஸ்ஸிங் ரூமில் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம்.' என்றார்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் இயற்கை நியதிக்கெல்லாம் சவால் விடும் வகையில் ரோஹித் தொடர்ந்து டாஸை தோற்றுக் கொண்டே இருக்கிறார். 'Law of Average' விதியெல்லாம் ரோஹித்தின் முன் சரண்டர் ஆகிவிட்டன. ஒருவர் தொடர்ச்சியாக 15 டாஸ்களை தோற்க 0.00305% சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளது. 1 சதவிகித வாய்ப்புகூட இல்லாத விஷயத்தை ரோஹித் டாஸில் செய்துகொண்டிருக்கிறார்.

இதற்கு முன் 1998-99 காலகட்டத்தில் பிரையன் லாரா தொடர்ச்சியாக 12 போட்டிகளில் டாஸைத் தோற்றிருக்கிறார். அந்த ரெக்கார்டையெல்லாம் ரோஹித் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.
ஒருத்தரால எப்படி சார் 48 பேப்பர்லயும் அரியர் வைக்க முடியும்?