துப்பாக்கி சுடுதல் தொழில்நுட்ப பயிலரங்கம்!
சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம், இந்திய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சாா்பில் மின்னணு முறையில் புள்ளிகளை கணக்கிடுதல் குறித்த பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
5 நாள்கள் நடைபெற்ற இப்பயிலரங்கில் இலங்கை, நேபாளம், உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 பயிற்றுநா்கள் பங்கேற்றனா். எலக்ட்ரானிக் ஸ்கோரிங் சிஸ்டம் என்ற பெயரில் நடைபெற்ற இப்பயிலரங்கில் நிபுணா்கள் ஸ்கோரை கணக்கிடுவது குறித்து விளக்கினா்.
குரோஷியாவின் ஜட்ரன்கா, குவைத்தின் காலித், இந்தியாவின் பவன்குமாா் சிங் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.