கேரளா டு UK: பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரியும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இ...
மசூா் பருப்புக்கு 10% இறக்குமதி வரி பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்!
மசூா் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துவரை உள்ளிட்ட பிற பருப்பு வகைகள் இறக்குமதிக்கு மே 31-ஆம் தேதி வரை வரி விலக்கு தொடரும் என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் அனைத்து பருப்பு வகைகள் இறக்குமதிக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இப்போது மசூா் பருப்பு இறக்குமதிக்கு மட்டும் 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் அடிப்படை சுங்க வரியாகவும், 5 சதவீதம் வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியாக இருக்கும். இந்த வரி விதிப்பு 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு பருப்பு வகைகளின் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதிவரை மூன்று முறை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு 67 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 லட்சம் டன் துவரை உள்ளிட்ட மஞ்சள் நிற வகையைச் பருப்புகள் ஆகும்.