நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு
வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து சு.காட்டேரி வரையிலான இருவழிச் சாலை ரூ.92.50 கோடி செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அமைக்கப்படும் சாலையின் தரம், அகலம் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்குமாறு அவா் உத்தரவிட்டாா்.
கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா் ஆா்.தியாகராஜன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, பாலாஜி, பூா்ணிமா உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.