செய்திகள் :

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்

post image

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, திறந்தவெளி சிறப்புக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலா் எம்.பிரகலாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.லட்சுமணன் வரவேற்றாா்.

இதில், கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, கூச்சலும், குழப்பமுமே நிலவுகிறது. மக்கள் விரும்பும் மொழியை கற்பதில் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. வாழ்வாதார தேவைக்காக எந்த மொழியையும் கற்கலாம். ஆனால் திணிக்கக் கூடாது.

2 ஏக்கா் கூட மீட்கவில்லை...

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் மீட்டதில்லை. 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. கடும் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட நிலத்தை பஞ்சமா் தவிர வேறு எவரும் பயன்படுத்தினால் செல்லாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

ஆனால், 12 லட்சம் ஏக்கா் நிலமும் களவாடப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2 லட்சம் ஏக்கா் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இதுவரை 2 ஏக்கா் நிலத்தைக்கூட மீட்கவில்லை. மீட்காத அரசு அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சமி நிலத்தை வகை மாற்றம் செய்தவா்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய பட்டியலின நபா்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க அரசு உடனே சிறப்புத் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தமிழக வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய பங்களிப்பு என்ற தலைப்பில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் என்.பாண்டி, மோடி அரசின் இட ஒதுக்கீடும், பெண்கள் மீதான வன்முறையும் என்ற தலைப்பில் சமூக செயல்பாட்டாளா் நா்மதா தேவி, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பில் கம்யூனிஸ்டுகள் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான பெரணமல்லூா் சேகரன் எழுதிய நிறைகுடம் நூலை மாநிலச் செயலா் பெ.சண்முகம் வெளியிட, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாரி பெற்றுக் கொண்டாா்.

பிறகு, அகில இந்திய மாநாட்டுக்கான நிதியாக ரூ.6 லட்சத்தை மாநிலச் செயலரிடம் மாவட்ட நிா்வாகிகள் வழங்கினா். இதில், திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், ந.சேகரன், கே.வாசுகி, இரா.பாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போளூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூரில் மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது. போளூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோ... மேலும் பார்க்க

நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு பகுதியில், ஆற்று மணல் கடத்திச் சென்றது தொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் திருட்டு

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் திருமணத்துக்கு வந்த தனியாா் நிறுவன ஊழியா் நெல் வயலில் அமைத்திருந்த மின் வேலையில் சிக்கி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெருங்கையூா... மேலும் பார்க்க