நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை: ப.சிதம்பரம்
விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் உதவி ஆணையர் கணேசனை கையும் களவுமாக பிடிக்கத் திட்டம் தீட்டினர்.

அதன்படி நேற்று மாலை பணி முடிந்து கலால் வரித்துறை உதவி ஆணையர் கணேசன் காரில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திர ரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே உதவி ஆணையர் கணேசனின் காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழிமறித்தனர். தொடர்ந்து அவரிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இதற்கான ஆவணங்களை கேட்டபோது உதவி ஆணையாளர் கணேசன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதைதொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனியார் மது விற்பனைக்கூடங்களிலும் மெத்தனால் ஆய்வகங்களிலும் பணம் லஞ்சமாகப்பெற்றது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கலால்வரித்துறை உதவி ஆணையர் கணேசனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.