பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Resident Engineer
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.30,627
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது மெட்டாலரிஜிக்கல், கெமிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல், அப்ளைடு வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 11.3.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.29,735 - 42,478
தகுதி: பொறியியல் துறையில் மெட்டாலரிஜிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 11.3.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 11.3.2025