"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
தேனியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நீதிமன்றத்தில் நீண்ட ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள், விபத்து நிவாரணம், வங்கிக் கடன், காசோலை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றில் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணான ஆா்.கவிதாவுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.76 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த முகாமில் வழக்குரைஞா்கள் பி.வடிவேல், எம்.உதயசூரியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.