``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ!
தேனி மாவட்டம், கம்பம் நகராட்கிக்குச் சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் 2 -ஆம் முறையாக ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி, கரும்புகையுடன் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கம்பம் நகராட்சியின் 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமாக பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள நூற்றுக்கணக்கான தெருக்கள் , வீடுகள், உணவகங்களில் சேகரிக்கும் குப்பைகள் லாரிகள், டிராக்டா்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கூடலூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
5 ஏக்கா் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் கடந்த மாதம் 17 -ஆம் தேதி தீப் பிடித்து பல நாள்களாக எரிந்தது. கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட 5 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தற்போது, 2 -ஆம் முறையாக பற்றிய தீ மக்கும், மக்காத குப்பைகளில் பிடித்து தீ மளமளவெனப் பரவி தீ கொளுந்து விட்டு எரிந்தது. குப்பைகளிலிருந்து வெளியேறிய கரும்புகை, துா்நாற்றத்தால் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா்.
நடவடிக்கை தேவை: கம்பம் நகராட்சி குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் பல ஆண்டுகளாக குப்பைகள் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. வளமீட்பு மையம் மூலமாக மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி, அவ்வப்போது குப்பைகளின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பைகளில் பற்றிய தீயை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.