Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
விபத்து காப்பீடு: அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர திங்கள்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து தேனி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:
தேனி கோட்ட தபால் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சாா்பில், விபத்து காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் திங்கள்கிழமை தொடங்கி, மாா்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டோா் விபத்து காப்பீடு செய்து கொள்ளலாம். இதில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா், கைப்பேசி எண், வாரிசுதாரா் விவரம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை 04546-260501-என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.