செய்திகள் :

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை... வெத்து வேட்டாகவே இருக்கும்!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘தி.மு.க அரசுதான் தமிழ்நாட்டில், முதன்முறையாக வேளாண் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைத் தாக்கல் செய்தது’’ என்று கடந்த நான்கு ஆண்டுகளாகவே பெருமை பேசிவருகிறார், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

‘‘வரலாறு முக்கியம்தான், ஆனால், கடந்த நான்கு வேளாண் நிதி நிலை அறிக்கை மூலம் என்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்’’ என்று கதறுகின்றன விவசாய சங்கங்கள்.

‘‘வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, விவசாயிகள் வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், கருத்துக்கேட்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அந்தக் கருத்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்துகள் எவை என்பது பற்றியெல்லாம் தெளிவாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கூடவே, ‘‘2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும்...’ என்பன உட்பட வேளாண்மை சார்ந்த 83 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் 73 வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை’’ என்றும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள்.

விவசாயத்தின் மீது அரசாங்கத்துக்குத் தெளிவான, தனித்த பார்வை இருக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் உடனுக்குடன் சென்று சேர வேண்டும்; அப்படி அவையெல்லாம் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்... உள்ளிட்ட காரணங்களுக்காகத்தான், ‘வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசாங்கமும் வரலாற்றுச் சாதனையாக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆரம்பித்தது. ஆனால், அதன் பலன் இன்னும் முழுமையாக விவசாயிகளைச் சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது, விவசாய சங்கங்களின் இந்த ‘வெள்ளை அறிக்கை’ கோரிக்கையும், தேர்தல் வாக்குறுதி தொடர்பான குற்றப் பத்திரிகையும்!

வெள்ளை அறிக்கை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைத் திரும்பிப் பார்ப்பதோடு... இதுவரை நிறைவேற்றப்படாத திட்டங்கள், இன்னும் தேவைப்படும் ஆக்கபூர்வமான திட்டங்கள் என அனைத்தையும், தங்களின் கடைசி ஓராண்டு ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற்ற தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இல்லையேல், ‘நாங்கள்தான் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டோம்’ என்று சொல்லிக்கொள்வது, வெத்து வேட்டாகவே இருக்கும்!

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கழிவறை... பொதுமக்களும் பயன்படுத்தலாம்! - வைரல் வீடியோவும் சட்ட விளக்கமும்!

‘நீங்க இப்ப சென்னை மவுன்ட் ரோட்டுல போய்க்கிட்டிருக்கீங்க. திடீர்னு உங்களுக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசரமான சூழல். பக்கத்துல பொதுக் கழிப்பறை எதுவும் இல்லை. சுத்திப் பார்த்தா பக்கத்துல ஐடிசி கிராண்ட் ... மேலும் பார்க்க

ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவ... மேலும் பார்க்க

`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!

இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே... மேலும் பார்க்க

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படும்... மேலும் பார்க்க

``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினே... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்

வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் க... மேலும் பார்க்க