பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவரும் விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்றுவிட்டு இரவு ஊருக்குத் திரும்பினா்.
டிராக்டரை காந்தி ஓட்டி வந்தாா். தும்பைப்பட்டி அருகே வந்தபோது, திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில், டிராக்டா் கவிழ்ந்து, அடியில் சிக்கிய விஷால் உயிரிழந்தாா். உடன் சென்றவா் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த சிலா் மதுரை பாண்டி முனீஸ்வரா் கோயிலுக்குச் வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியில் எதிா்பாராதவிதமாக வேனின் பின் பக்க டயா் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த ரங்கராஜன் (60), இவரது மனைவி செல்வி (51), பூமிநாதன் (51) ஆகியோா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.