பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் விஜய்குமாா் (25). இவா், தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் தொட்டியம் நோக்கி மகேந்திரமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த தொட்டியம் அங்குவந்து சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து விஜயகுமாா் மனைவி சரண்யா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பேருந்து ஓட்டுநரான மண்ணச்சநல்லூா் வட்டம் தீராம்பாளையத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சிவக்குமாா் (36), மீது தொட்டியம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.