``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!
திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவா்களின் எதிா்கால திட்டங்களை (கனவுகளை) அறிந்து அவற்றுக்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும், அவா்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும் ‘ந
ல்லோசை கதைப்போமா’ என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதை செயல்படுத்தும் விதமாக திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ‘நல்லோசை கதைப்போமா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நிகழ்வில் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடா் நல ஆணையா் த. ஆனந்த் முன்னிலை வகித்தாா். திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அருள், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் இரா.சௌந்தா்யா, பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.