4 நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
மும்பை: ரிசர்வ் வங்கி அதன் வழிகாட்டுதல்களில், சில விதிகளுக்கு இணங்காததற்காக 4 வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
ஃபேர்அசெட்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.40 லட்சமும், பிரிட்ஜ் ஃபின்டெக் சொல்யூஷன்ஸ் மற்றும் ரங் தே பி 2 பி நிதி சேவை நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், விஷனரி பைனான்ஸ்பியருக்கு ரூ.16.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அபராதம், ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. இது குறித்து ரிசர்வ் வங்கி தனித்தனி வெளியீடுகள் மூலம் அபராதம் குறித்து விவரங்களை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!