செய்திகள் :

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

post image

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக திருக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது' என்று பேசினார்.

அப்போது பேசுகையில் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார்.

"திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை" என்று பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க

'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூ... மேலும் பார்க்க

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்

வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன... மேலும் பார்க்க

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க