மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழப்பு
மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது. மேலும், ஒரு பசு காயமடைந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூரில் வசிப்பவா் சங்கீதா. இவா் இரண்டு பசுமாடுகளை வளா்த்து வந்துள்ளாா். இவா் வழக்கம்போல இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அப்பகுதியிலுள்ள ஓடையில் விட்டுள்ளாா்.
இந்நிலையில், புதரில் மறைந்திருந்த புலி, ஒரு பசுவை தாக்கி சாப்பிட்டுள்ளது. பின்னா் மற்றொரு பசுவை தாக்கியபோது, அது சப்தமிட்டுள்ளது. இதனைக் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது, புதருக்குள் புலி ஓடி மறைந்தது.
இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் காயமடைந்த பசுவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனவா் வீரமணி உள்ளிட்டோா் அப்பகுதியை ஆய்வு செய்து, இறந்த பசுவுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.