3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
புலிகள் இறந்துகிடந்த இடத்தை சுற்றி 10 கேமராக்கள் பொருத்தம்
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 தானியங்கி கேமராக்களை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பொருத்தினா்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை வனப் பகுதியில் ஒரே வாரத்தில் ஐந்து வயதுடைய பெண் புலி ஒன்றும், 10 வயது ஆண் புலி ஒன்றும் இறந்துகிடந்தன.
இந்த பகுதியில் புலிகள் உள்ளிட்ட பிற வன விலங்குகளின் நடமாட்டங்களை கண்டுபிடிக்க வனத் துறையினா் அப்பகுதியை சுற்றி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.