பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து நாடுகாணியில் பொதுமக்கள் போராட்டம்
கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியில் உள்ள அரசுப் பண்ணையை பூங்காவாக மாற்ற ரூ.70 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. திடீரென வனத் துறை பூங்காவை அங்கிருந்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த ஊரின் வா்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனா். அப்போது, திருமண விழாவில் கலந்துகொள்ள அந்த வழியாக சென்ற தேமுதிக விஜய பிரபாகா், பொதுமக்களுக்கு ஆதரவாக வாழ்த்திப் பேசினாா்.