``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்ப...
பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுஞ்கை, விக்னேசுவர பூஜை, வாஸ்து சாந்தி, லெட்சுமி பூஜை, முதலாம், இரண்டாம், கால பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து திங்கள்கிழமை யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியா்கள் குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் கொன்னையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.