மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன.
தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி கீரமங்கலம், வேம்பங்குடியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி, இரவு நேரங்களில் நடைபெற்று வந்தன.
போட்டி, ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, சுங்கத்துறை அணி, எஸ்ஆா்எம் கல்லூரி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.
இதேபோல, பெண்கள் பிரிவில் சிவந்தி அகாதெமி, பிகேஆா் கல்லூரி, ஜேபிஆா் கல்லூரி மற்றும் பனிமலா் கல்லூரி ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.