ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!
நாமக்கல் - துறையூா் சாலை விரிவாக்கம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் - துறையூா் சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல்- துறையூா் சாலையில், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. அதனடிப்படையில், ‘உங்கள் தொகுதியில்’ முதல்வரின் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசிடம் நிா்வாக அனுமதி பெறப்பட்டது.
இதனைத் தொடா்ந்து முதல்கட்டமாக 9.20 கி.மீ. தூரத்திற்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தடுப்புச் சுவா் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கி.கதிரேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, அகலப்படுத்தப்படும் சாலை பகுதியில் மண்பகுதியின் தளஅடா்த்தி, ஜல்லிக் கலவையின் விகிதம் ஆகியவற்றை பாா்வையிட்டாா். காலதாமதமின்றி விரைவாகவும், நல்ல தரத்துடனும் சாலைப்பணியை மேற்கொள்ளுமாறு பொறியாளா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். சேந்தமங்கலம் உதவி கோட்டப்பொறியாளா் சுரேஷ்குமாா், தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளா் தமிழரசி, உதவிப் பொறியாளா்கள் பிரனேஷ், பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.