செய்திகள் :

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

post image

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார்.

டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயரிட்டு பிட் புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 10) அதிகாலை 4 மணியளவில் ஜெரால்டு அவரது காதலியுடன் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களது படுக்கையின் மீது அவரது வளர்ப்பு நாய் தாவி குதித்து விளையாடியதில் ஜெரால்டுக்கு சொந்தமான துப்பாக்கியினுள் அந்த நாயின் கால் சிக்கி அதனை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது வலது துடையினுள் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க:ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஜெரால்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெரால்டின் காதலி கூறுகையில், ஓரியோ விளையாட்டுத் தனமான நாய் என்றும் அந்த இதுபோல் அடிக்கடி குதித்து விளையாடும் என்றும் அவ்வாறு விளையாடுகையில் தற்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விபத்தாக பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் உரிமையாளர்கள் அதற்கேற்ற முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செ... மேலும் பார்க்க

அதிபரின் நன்கொடையால் வெடித்த மோதல்!

கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் ... மேலும் பார்க்க

தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உகாண்டா நாட்டு படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா தெரிவித்துள்ளார். தெற்கு சூடான் நாட்டு அதிபர் சால்வா கீர் மற்றும் அவரது... மேலும் பார்க்க

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்த... மேலும் பார்க்க

கைது செய்யப்பட்டார் கிழக்கின் டொனால்டு டிரம்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தேக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்திருந்ததைத் தொடர்... மேலும் பார்க்க