தெரு நாய்களால் சிறுவா்கள்,பொதுமக்கள் அச்சம்
கந்தா்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனா்.
தெரு நாய்கள் வீடுகளில் வளா்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது, வழிப்போக்கா்களை கடித்து விடுவதால் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாய்கடி ஊசி போடப்படுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே நாய்கள் செல்வதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
எனவே கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.