Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
பொன்னமராவதியில் அரசு கலை கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிலரங்கத்துக்கு கட்சியின் ஒன்றிய துணைத் தலைவா் வி. கருணாமூா்த்தி தலைமைவகித்தாா்.
மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு தொடங்கிவைத்தாா். மாவட்ட பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் அ.சேசுராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் பொன்னமராவதியில் உள்ள விவசாய கண்மாய் மற்றும் குளங்களை தூா்வாரி ஆழப்படுத்தவேண்டும். பொன்னமராவதி வட்டார ஏழை, எளிய மாணவா்கள் கல்லூரி கல்வி பெறும் வகையில், இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.
பொன்னமராவதியில் கோட்டாட்சியரகம் அமைக்கவேண்டும். காரையூா் காவல் நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின்கீழ் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக சட்டத் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பொன்னமராவதி உழவா் சந்தை, பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளை செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.