செய்திகள் :

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

post image

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

விக்கெட் கீப்பர் இஸி கேஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹேலி ஜென்சன் மற்றும் பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக வரவிருக்கும் டி20 தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இஸி கேஸ் ஒருநாள் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இதையும் படிக்க:15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன் டிவில்லியர்ஸ்!

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்று அசத்தியது.

டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பர்பாலி இங்கிலிஸ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ப்ரீ இல்லிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஃப்ளோரா டெவன்ஷயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பாலி இங்கிலிஸ் மற்றும் ப்ரீ இல்லிங் ஆகியோர் இலங்கை ஒருநாள் தொடரின் மூலம் அறிமுகமான நிலையில், ஃப்ளோரா டெவன்ஷயர் அறிமுக வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார் . 

நியூசிலாந்து அணி விவரம்

சுசி பேட்ஸ் (கேப்டன்), மேடி கிரீன், பாலி இங்கிலிஸ், ஜார்ஜியா பிளிம்மர், இஸி ஷார்ப், ப்ரூக் ஹாலிடே, எம்மா மெக்லியோட், ஈடன் கார்சன், ப்ரீ இல்லிங், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஃப்ளோரா டெவன்ஷயர்.

இதையும் படிக்க: ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிர... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் முதல் போட்டிக்கான அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, மறுவிற்பனை தளத்தில் ரூ. 1.23 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்ட... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸ்தான் சிறந்த ஃபீல்டர்..! ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்!

இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான் என ஜான்டி ரோட்ஸ் ஒப்புக்கொண்டார்.கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்தான்... மேலும் பார்க்க

15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன் டிவில்லியர்ஸ்!

28 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டனுமான ஏபி டிவில்லியர்ஸ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அதன் அணியில் இணைந்தார்.துபையில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகள... மேலும் பார்க்க