`என்னை அச்சுறுத்துகிறார்கள்; எமோஷனலாக உடைந்துவிட்டேன்' - தங்க கடத்தல் வழக்கு குற...
15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன் டிவில்லியர்ஸ்!
28 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டனுமான ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட்டார்.
இந்த நிலையில், தென்னாபிரிக்காவில் அறக்கட்டளைக்காக நடத்தப்படும் லெஜெண்ட்ஸ் டி20 தொடரில் புல்ஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய டைட்டன்ஸ் லெஜண்ட்ஸ் அணியின் வீரரான டிவில்லியர்ஸ், தனது வழக்கமான பாணியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். ஏலியன், மிஸ்டர் 360 எனப் புகழப்படும் டிவில்லியர்ஸ் 360 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 28 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில், பவுண்டரிகள் இல்லாமல் 15 சிக்ஸர்களை விளாசினார்.
இதையும் படிக்க:ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!
முதலில் பேட்டிங் ஆடிய டைட்டன்ஸ் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய புல்ஸ் லெஜண்ட்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 16 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 19,000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம், சதம், 150 விளாசியுள்ளார்.
தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்சிபி அணிகள் தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் 41 வயதான டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி வருவதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பவேண்டும் என்று தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்சிபி இணையதள கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க:ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!
Mr 360
— SuperSport Park (@SuperSportPark) March 9, 2025
A maiden Legends Century for AB de Villiers. #TasteofSSPpic.twitter.com/JPpoxiFlPR