Nadaaniyan Review: காதலனாக நடிக்க வரும் ஹீரோ; `நட்புக்காக' நாயகி - வொர்க் ஆகிறதா...
சிறுமி பாலியல் வன்கொடுமை: சகோதரா்கள் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரா்களை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை, வல்லம் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன்கள் அபிமன்யு, முத்தரசன் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, அபிமன்யு (23), முத்தரசன் (28) இருவரையும் கைது செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நாகை சிறையில் அடைத்தனா்.