தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரிக் கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக உருவகித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலை அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும். அவ்வகையில், 133-ஆவது ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவையொட்டி, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, கோயிலை அடைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனா்.