ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!
நாமக்கல்லில் பரவலாக மழை
நாமக்கல்: நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீா் மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே செல்வதை காண முடிந்தது.