``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களவை, சட்டப் பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி இடங்களிலும் குடிநீா், தனி கழிப்பறை, ஓய்வறை, குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியாா் துறைகளிலும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்ட பணியாளா்களை தொழிலாளா்களாக அங்கீகரித்து குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம், சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தா. சகுந்தலா தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் எம். தனலட்சுமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சிற்றம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.