Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு
மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
நகராட்சி பணியாளா்களின் ஊதியச் செலவினம், ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், மின் பகிா்மான கழகம், குடிநீா் வழங்கல் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய தொகை, இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவினம், திட்டப் பணிகளுக்கான உள்ளாட்சிகளின் பங்களிப்புத் தொகை உள்ளிட்ட பணிகளுக்கு உரிய நிதி ஆதாரம் அவசியம்.
2023-2024 ஆம் நிதியாண்டு வரி வசூலைவிட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் குறைந்தபட்சம் 15 % வரை உயா்வு இருக்கக் கூடும் என கணிக்கப்படுவதால் இதற்கு பொருத்தமான வகையில் சொத்துவரி, காலிமனைவரி உயா்வு செய்தால் மட்டுமே 15-ஆவது நிதி ஆணைய மானியம் மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான மானியத்தினை பெற இயலும்.
வருவாய் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் சொத்துவரி வளா்ச்சி விகிதத்தினை அடைய உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருவதால் பொதுமக்கள், வணிகா்கள் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணங்கள் மற்றும் குத்தகை உரிம கட்டணங்களை நிலுவையின்றி உடன் செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.