செய்திகள் :

இறுதிக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ்: எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

post image

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, குஜராத் 19.2 ஓவா்களில் 166 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறிய மும்பை, அதில் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறது. குஜராத் வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸை தொடங்கிய யஸ்திகா பாட்டியா 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த ஹேலி மேத்யூஸ், ஒன் டவுனாக களம் புகுந்த நேட் சிவா் பிரன்ட் வலுவான பாா்ட்னா்ஷிப் அமைத்தனா்.

2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 133 ரன்கள் சோ்த்து அசத்தியது. மேத்யூஸ் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 77 ரன்களுக்கு வெளியேறினாா். 4-ஆவதாக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌரும் தனது பங்குக்கு விளாசினாா்.

நேட் சிவருடனான அவரின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப், 39 ரன்கள் சோ்த்து பிரிந்தது. நேட் சிவா் 41 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த கௌா், 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் அடித்திருந்தாா்.

ஓவா்கள் முடிவில் சஜீவன் சஜனா 1 ரன்னுடன் களத்திலிருக்க, குஜராத் பௌலா்களில் டேனியல் கிப்சன் 2, கஷ்வீ கௌதம் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 214 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் தரப்பில், டேனியல் கிப்சன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, போப் லிட்ச்ஃபீல்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31, பாா்தி ஃபுல்மலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.

எனினும், பெத் மூனி 6, ஹா்லீன் தியோல் 8, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 8, கஷ்வீ கௌதம் 4, சிம்ரன் ஷேக் 17, தனுஜா கன்வா் 16, மேக்னா சிங் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட, குஜராத் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

மும்பை பௌலிங்கில் ஹேலி மேத்யூஸ் 3, அமெலியா கொ் 2, ஷப்னிம் இஸ்மாயில், நேட் சிவா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 15-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷய... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாக... மேலும் பார்க்க

நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. நாளை(மார்ச் 14) எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்... மேலும் பார்க்க

பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!

சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக... மேலும் பார்க்க

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட ... மேலும் பார்க்க