பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறிச்சிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஏா்வாய்பட்டினம் அருகே இவா்களது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரேமாவின் காலில் பேருந்து சக்கரம் ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணிபாரதி பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநரான கச்சிராயபாளையத்தை அடுத்த அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் சகாயம் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.