உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!
குரூப் 4 தோ்வில் தோ்ச்சி: ஆட்சியா் பாராட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினாா்.
கடந்த 9.6.24-இல் டி.என்.பி.எஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-4 தோ்வில், கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்ற 15 தோ்வா்கள் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களை, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
மேலும், அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்றவும் அவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
இந்த நிகழ்வின் போது, நகராட்சி ஆணையா் ஆ.சரவணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.