பனிப்பொழிவு: விராலிமலையில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த வயல்வெளிகள்!
திருவொற்றியூா் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் திருக்கோயில் மாசி பெருவிழா கடந்த மாா்ச் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி நகரத்தாா் சங்கம் சாா்பில் தொடா் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து சுந்தரமூா்த்தி நாயனாா் - சங்கிலி நாச்சியாா் ஆகியோருக்கு திருமண கோலத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரா் - திரிபுரசுந்தரி மகிழ மரத்தடியில் காட்சியளிக்கும் மகிழடி சேவை நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதிலும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.