செய்திகள் :

ஓய்வு பெற்றவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

post image

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் திமுக அரசு பணியில் நியமிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு காலிப் பணியிடங்களில் 3.50 லட்சம் தமிழக இளைஞா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும் திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமா்த்தப்படுகின்றனா்.

குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலா்கள், சாா்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலா்கள் நிலையில் பலா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

வேலை தேடுவோருக்கு பேரிடி: இந்த நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, மாதம் ரூ. 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆலோசகராகப் பணிபுரிவதற்கு, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலா் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள் 2025 மாா்ச் 21-க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் தவமிருக்கும் நிலையில், அவா்களின் தலையிலும் மற்றும் தற்போது பதவி உயா்வுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியா்களின் தலையிலும், திமுக அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் உடனடியாக தோ்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

நெசப்பாக்கம் மயானம் 6 மாதம் இயங்காது

நெசப்பாக்கம் மயானம் அடுத்த 6 மாத காலத்துக்கு இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் மண்ட... மேலும் பார்க்க

மதுபோதையில் இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை, வடபழனியில் மதுபோதையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தாஜ் உசேன் (35). அதே பகுதியில் வசிக்கும் திருநெல்வேலி... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் புதிய சாதனை

நிகழ் நிதியாண்டில் மொத்தம் 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 51 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக... மேலும் பார்க்க

சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

சென்னை: அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நட்சத்தி... மேலும் பார்க்க

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வெப்பேரி பகுதியில் பைனான்ஸ் செய்து வருபவ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடா் கண்காணிப்பு: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

நியூயாா்க்: ஆப்கானிஸ்தான் நிலவரத்தை இந்தியா தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அங்கு ஆட்சியிலுள்ள தலிபான் அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஐ.ந... மேலும் பார்க்க